NSS Activities
நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி, கோவிலூர் (காரைக்குடி), நாட்டு நலப்பணித் திட்டம் (அலகு எண்- 79) சார்பாக முன்னாள் பிரதமர் ஸ்ரீ ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 18.08.2023 அன்று காலை
கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியை M.சீதாலட்சுமி அவர்களின் தலைமையில் கல்லூரியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களும் தேசிய நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. லெட்சுமணன் செய்திருந்தார்.
நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி, கோவிலூர் (காரைக்குடி), தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (அலகு எண்- 79) மற்றும்
காரைக்குடி GMCKS பிராணிக் ஹீங் & அர்ஹாட்டிக் யோகா மையமும் இணைந்து 29.08.2023 அன்று பிற்பகல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் R. சந்திரமோகன் அவர்களின் முன்னிலையில் கல்லூரியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லா பணியாளர்களுக்கும் "உடல் ஆரோக்கியத்திற்கான பிராண சிகிச்சை பயிற்சி" வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. லெட்சுமணன் செய்திருந்தார்.
நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி, கோவிலூர் (காரைக்குடி), நாட்டு நலப்பணித் திட்டம் (அலகு எண்- 79) சார்பாக சமூக நீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 15.09.2023 அன்று காலை கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் R.சந்திரமோகன் மற்றும்
கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியை M.சீதாலட்சுமி அவர்களின் முன்னிலையில் அனைத்து
ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லா பணியாளர்களும் "சமூக நீதி நாள்" உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. லெட்சுமணன் செய்திருந்தார்.
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், லியோ கிளப் மற்றும் காரைக்குடி நகராட்சி ஒன்பதாவது வார்டு இணைந்து தூய்மை இந்தியா 3.0 திட்டத்தை முன்னிட்டு 13.10.2023 அன்று காலை கல்லூரியின் முதல்வர் பேராசிரியர். சந்திரமோகன் அவர்களின் வழிகாட்டுதலின் படி ஒன்பதாவது வார்டு தூய்மை பணியாளர்களுடன் இணைந்து காரைக்குடி கழனிவாசல் அருகே உள்ள பருப்பூரணி குளம் சுத்தப்படுத்தும் பணியை சிறப்பாக செய்தனர். இந்நிகழ்வில் காரைக்குடி நகராட்சியின் தலைவர் திரு. முத்து துரை, காரைக்குடி அரிமா சங்கத் தலைவர் திரு. போஸ், காரைக்குடி நகர நல அலுவலர் Dr. திவ்யா, ஒன்பதாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் Dr. கலா காசிநாதன், காரைக்குடி நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், முன் களப் பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.லெட்சுமணன் செய்திருந்தார்.
நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி, கோவிலூர், (காரைக்குடி), நாட்டு நலப்பணித் திட்டம் (அலகு எண்- 79) சார்பாக
14 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 24.01.2024 அன்று காலை கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியை M.சீதாலட்சுமி அவர்களின் தலைமையில் கல்லூரியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களும் "தேசிய
வாக்காளர் தின" உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. லெட்சுமணன் செய்திருந்தார்.
நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (அலகு-79) சார்பாக 09.02.2024 அன்று காலை கல்லூரியின் முதல்வர்,
பேராசிரியர் R. சந்திரமோகன் அவர்களின் வழிகாட்டுதலின் படி
கோவிலூரில் அமைந்துள்ள "அருள்மிகு தென் சபாநாயகர் திருக்கோயில்" வளாகத்தை தூய்மை செய்யும் பணியை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மிகச் சிறப்பாக மேற்கொண்டனர்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. லெட்சுமணன் செய்திருந்தார்.
இரத்ததான முகாம்,மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மற்றும் லியோ கிளப் நிறுவுதல் நிகழ்ச்சி அறிக்கை
நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம்) (அலகு - 79), இளம் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், காரைக்குடி அரசு மருத்துவமனை, காரைக்குடி அரிமா சங்கம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குன்றக்குடி மற்றும் செம்பனூர் ஆகியவை இணைந்து 07.09.2023 அன்று கல்லூரி வளாகத்தில் இரத்ததான முகாம், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மற்றும் லியோ கிளப் நிறுவுதல் நிகழ்ச்சிகள் நடந்தேறியது.
கோவிலூர் ஆதினம் சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். கல்லூரியின் தாளாளர் முனைவர் M. வீரப்பன் பாராட்டுரை வழங்கினார், கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் R.சந்திரமோகன் தலைமையுரை ஆற்றினார். அரிமா சங்கத்தின் கவர்னர் Dr.S.S.பாரிபரமேஸ்வரன் முக்கிய குறிப்புரை ஆற்றினார். கல்லூரியின் கணினியியல் துறை தலைவர் முனைவர் K. கலா வரவேற்புரை ஆற்றினார்.
காரைக்குடி அரசு மருத்துவமனையின் இரத்த வங்கி பொறுப்பாளர் Dr. V.அருள்தாஸ் மற்றும்அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செம்பனூர் மருத்துவர் ஆல்வின் ஜேம்ஸ், காரைக்குடி அரிமா சங்க தலைவர் திரு N.போஸ், செயலர் திரு KM. அருணாச்சலம் மற்றும் பொருளாளர் திரு R.. விஜய் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு S. லெட்சுமணன் நன்றியுரை வழங்கினார்.
இம்முகாமில் ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் 50 பேர் இரத்ததானம் செய்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் (NSS) திட்ட அலுவலர் திரு.S. லெட்சுமணன், செஞ்சுருள் சங்க (RRC) திட்ட அலுவலர் Dr.K. சத்தியமூர்த்தி மற்றும் இளம் செஞ்சிலுவை சங்க (YRC) திட்ட அலுவலர் Dr.B. திருக்குமரன் ஆகியோர் செய்திருந்தார்கள்.
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குதல் நிகழ்ச்சி
நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (அலகு-79) சார்பாக 19.09.2023 அன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பேராசிரியர். R. சந்திரமோகன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை (Albendazole Tablets) வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்ததுடன், குடற்புழு நீக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான ஆலோசனைகளையும் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.லெட்சுமணன் செய்திருந்தார்.
தூத்துக்குடிக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு
நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி, கோவிலூர் நாட்டு நலப் பணித்திட்டம் (அலகு எண்- 79) சார்பாக கல்லூரியின் செயலர், தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட அதித கனமழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் 04.01.2024 அன்று கல்லூரியின் அனைத்து மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்களிடமிருந்து அரிசி, பருப்பு வகைகள், ரவை, சேமியா, மசாலா பவுடர், பிஸ்கட், பிளாஸ்டிக் தட்டுகள், நாப்கின்கள், புதிய ஆடைகள் உள்ளிட்ட ரூ.75,000 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவராம மங்களம் என்னும் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் (NSS) திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. S. லெட்சுமணன் செய்திருந்தார்.
வாக்காளர் விழிப்புணர்வு விழா மற்றும் உறுதிமொழி ஏற்றல்
நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் (திட்டம் அலகு) 79), செஞ்சுருள் சங்கம், இளம் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கல்லூரி வளாகத்தில் 21.03.2024 அன்று "வாக்காளர் விழிப்புணர்வு விழா மற்றும் உறுதிமொழி ஏற்றல்" நிகழ்வு நடந்தேறியது.
கோவிலூர் ஆதினம் சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார், கல்லூரியின் தாளாளர் முனைவர் M. வீரப்பன் தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர். R. சந்திரமோகன் வரவேற்புரை ஆற்றினார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர், முனைவர். P.சீனிவாசன், வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர்.K.கிருஷ்ணமூர்த்தி, வாழ்நாள் கற்றல் துறைத் தலைவர், முனைவர். N. ஜான்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அதனைத் தொடர்ந்து வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடந்தேறியது.
நிறைவாக கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. S.லெட்சுமணன் நன்றியுரை வழங்கினார்.
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - 26.06.2023
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியின்
(கோவிலூர், காரைக்குடி) நாட்டு நலப்பணித் திட்டம் (அலகு எண்-79), இளம் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் ஆகியவை இணைந்து போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு 26.06.2023 அன்று காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை கல்லூரி மாணவ / மாணவியர்களைக் கொண்டு காரைக்குடி அண்ணா சிலை பேருந்து நிறுத்தத்திலிருந்து, காரைக்குடி பழைய பேருந்து நிறுத்தம் வரை போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் அறிவுரைகள் அடங்கிய பலகைகள் (Placards) மற்றும்
பதாகைகள் (Banners) மூலம் பேரணி நடத்தப்பட்டது.
இப்பேரணியை கல்லூரியின் முதல்வர் முனைவர் வெ.மாணிக்கவாசகம் தலைமை உரையாற்றி பேரணியை துவக்கி வைத்தார்.
காரைக்குடி நகராட்சியின் தலைவர் திரு. எஸ். முத்து துரை காரைக்குடி, நகராட்சியின் உறுப்பினர்கள் திருமதி.தெய்வானை இளமாறன், திருமதி. சத்யா கார்த்திகேயன், திருமதி.திவ்யா சக்தி, திருமதி. கலா காசிநாதன் மற்றும் திருமதி.மலர்விழி பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.லெட்சுமணன் வரவேற்புரை வழங்கினார். செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் திரு.சத்தியமூர்த்தி நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.லெட்சுமணன், செஞ்சுருள் சங்க (RRC) திட்ட அலுவலர் திரு. சத்தியமூர்த்தி மற்றும் இளம் செஞ்சிலுவை சங்க (YRC) திட்ட அலுவலர் திரு. திருக்குமரன் ஆகியோர் செய்திருந்தார்கள்.
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (அலகு 79), செஞ்சுருள் சங்கம் மற்றும் இளம் செஞ்சிலுவை சங்கம் இணைந்து சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில்,2024 பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவினை அளிக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 08.04.2024 அன்று காலை 10.00 மணியளவில் காரைக்குடி அண்ணா சிலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து காரைக்குடி பழையபேருந்து நிலையம் வரை "வாக்காளர் விழிப்புணர்வு பேரணி" நிகழ்வு நடந்தேறியது.
கோவிலூர் ஆதினம் சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள் ஆசியுடன், கல்லூரியின் தாளாளர் முனைவர் M. வீரப்பன் தலைமையில், கல்லூரியின் முதல்வர் பேராசிரியர். R. சந்திரமோகன் வழிகாட்டுதலின்படி "வாக்காளர் விழிப்புணர்வு பேரணி" நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. பல்கலைக்கழகத்தின் நாட்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர். இப்பேரணியில் நலப்பணித் அழகப்பா திட்டத்தின் ஸ்ரீனிவாசன்,காரைக்குடி நகராட்சியின், தேர்தல் பொறுப்பாளர் திரு. ஆனந்த விசுவாசம், தாசில்தார் திருமதி. தங்கமணி, கல்லூரியின் பல்வேறு துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என 150க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வும் நடைபெற்றது. இப்பேரணிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டுநலப்பணித் (NSS) திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.S. லெட்சுமணன், செஞ்சுருள் சங்க (RRC) திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் K. சத்தியமூர்த்தி மற்றும் இளம் செஞ்சிலுவை சங்க (YRC) திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் S.திருக்குமரன் ஆகியோர் செய்திருந்தார்கள்.