நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரியில் உலக புகைப்பட தின விழா
காரைக்குடி, ஆ.க.21:
காரைக்குடி கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித்தொடர்பியல் துறையின் விளக்கம் மீடியா கிளப் சார்பாக உலகப் புகைப்பட தின விழா நடந்தது.
கோவிலூர் மாலைய ஆதினம் சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள் அருளாசியுடனும், கோவிலூர் மலைய கல்விக் குழுமங்களின் தாளாளர் முனைவர் மா. வீரப்பன் வழிகாட்டுதலுடனும், கல்லூரி முதல்வர் முனைவர் கலா தலைமையிலும் விழா நடைபெற்றது.
நிகழ்வில் ‘பொம்மை காதலன் அருங்காட்சியகம்’ துணையுடன் பழமையான கேமராக்களின் விண்டேஞ் கேமராக கண்காட்சி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு புகைப்படப் போட்டிகளும் நடத்தப்பட்டது.
மெட்டாள்கிறிஸ்டியன் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறை உதவிப் பேராசிரியரும், கேமரா இன்னிப்பனையன்சரும், வனவிலங்கு புகைப்படக் கலைஞருமான பாலா மணிகண்டன் கலந்து கொண்டார்.
100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் புகைப்படப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத் துறையில் திறமையை வெளிப்படுத்திய மாணவரை ஊக்குவிக்கும் வகையில் ‘நாச்சியப்ப சுவாமிகள் இளம் புகைப்படக் கலைஞர் விருது’ வழங்கப்பட்டது.
விளக்கம் மீடியா கிளப்பின் மாணவர் தலைவர் செல்வன் வெங்கடேஷ் வரவேற்றார். கிளப் பொருளாளர் பியூலா நன்றி கூறினார்.